» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டு சமையலை அடுத்தவர்களுக்கு பகிர்வதை தவிருங்கள்: கண்காணிப்பு அலுவலர் அறிக்கை

செவ்வாய் 7, ஜூலை 2020 11:20:37 AM (IST)

வீட்டு சமையலை அடுத்தவர்களுக்கு பகிர்வதை தவிர்க்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா  வெளியிட்ட செய்திகுறிப்பில், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா  நமது மாவட்டத்திலும் நம்மிடையே இருக்கிறது. என்பதை ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மையாகும். இதனைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை. ஆனால் பாதுகாப்பாக இருப்பது மிக அவசியம். நாம் அனைவரும் எப்பொழுதும் முகக்கவசம் அணிய வேண்டியது மிக மிக அவசியம். சமூக இடைவெளியை  கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நீர் திவலையின் மூலமாகத்தான் இந்த நோய் பரவும் என்பதால் தும்மல், இருமல் மூலம் பரவுவதை தவிர்க்க இயலாது. எனவே பிறரிடம் பேசும் பொழுது முக கவசம் அணிவது கட்டாயம். பொது இடங்களில் 3 மீட்டர் இடைவெளிவிட்டு இருப்பது மிகவும் பாதுகாப்பானது. ஒருவர் வீட்டு சமையலை இன்னொருவர் வீட்டுக்கு பகிர்ந்து கொள்வதை கொஞ்சமாகவும் தவிர்க்கலாம்.எதை சாப்பிட்டாலும் சூடாக சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். குளிர்ந்த பதார்த்தங்கள், குளிர் பானங்களை தவிர்ப்பது நல்லது. பெண்கள் இந்த கொடூர வைரஸிலிருந்து எப்படி தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் காக்க முடியும் என்பதை நன்றாகத் அறிந்து கொள்ள வேண்டும்.

தொற்று பாதித்தவர்களை  கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் மிக சரியான முறையில் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் தொற்று பரவாமல் காத்துக்கொள்ளும் மிகப்பெரிய பொறுப்பு பொது மக்களாகிய நம்மிடம் தான் உள்ளது.இவ்வாறு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory