» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி பெற்று தரப்படும் : தளவாய்சுந்தரம் உறுதி

திங்கள் 6, ஜூலை 2020 5:30:02 PM (IST)


தமிழக முதல்வரை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள், கேரளாவில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என கடலோர பங்கு தந்தையர்கள் மற்றும் மீனவசங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல்,கேரளா மாநிலத்திற்கு, தற்போதைய ஜூன், ஜூ;லைஆகியமாதங்கள் தடைக்காலம் முடிந்து,மீன்பிடிக்கசெல்வார்கள். தற்போது,கொரோனா ஊரடங்கு காலம் கேரளாமாநிலத்தில் கடைபிடிக்கப்படுவதால்,கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த மீனவர்கள்,கேரளா மாநில அரசிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்து,நாகர்கோவில்,கடலோரஅமைதிமற்றும் வளர்ச்சி மைய அலுவலகத்தில்,இன்று (06.07.2020) ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கேரளாவில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தமிழக முதல்வர் எடப்பாடிகே.பழனிசாமியை வலியுறுத்தி,உரிய அனுமதி பெற்றுத்தர வேண்டும் எனவும் கூட்டத்தில் கோரிக்கைவைத்தனர். இது குறித்து முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் தகவல் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory