» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் கடைகளை திறக்க கட்டுப்பாடு : ஆட்சியர் தகவல்

வியாழன் 2, ஜூலை 2020 12:10:51 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் இல்லாமல் குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல் மாவட்டத்திற்குள் வாகனங்களில் செல்ல இ-பாஸ் தேவையில்லை. குமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகம் பரவி வருவதை தொடர்ந்து அனைத்து கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்களும், மருந்து கடைகளும் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தங்களது பகுதிக்கு வரும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுவரை மொத்தம் 44 ஆயிரத்து 866 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory