» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர் ஆய்வு

வியாழன் 2, ஜூலை 2020 11:41:13 AM (IST)

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆணையர் ஆஷா அஜித் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய மாநகராட்சி ஆணையராக கடந்த வாரம் ஆஷாஅஜீத் பதவியேற்றார். அவர் மாநகராட்சி சார்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோயில், அருகுவிளை, கலுங்கடி ஆகிய பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் புளியடி பகுதியில் செயல்பட்டு வரும் நுண் உர செயலாக்க மையத்தை பார்வையிட்டார். ஆய்வின்போது சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் அவர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory