» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சந்தையில் கடை நடத்தி வருபவருக்கு கரோனா : கிருமிநாசினி தெளிப்பு

புதன் 1, ஜூலை 2020 11:35:05 AM (IST)நாகர்கோவிலில் தற்காலிக சந்தையில் கடை டை நடத்தி வருபவருக்கு கரோனா உறுதியானதால் அவர் கடை வைத்திருந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் தற்காலிக சந்தையில் கடை நடத்தி வரும் நங்கூரான் பிலாவிளை பகுதியை சார்ந்த ஒருவருக்கு கரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால்மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர்  பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் அவர் நடத்தி வந்த கடை  முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடை மூடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory