» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட பேருந்துகளில் குறைவான பயணிகள் பயணம்

புதன் 3, ஜூன் 2020 11:42:37 AM (IST)


எழுபத்தியோரு நாட்களுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியிருக்கிறது. சுமார் 182 பஸ்கள் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்கிறது. ஆனால் பயணிகள் மிக குறைவாகவே பயணிக்கின்றனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக 5 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று முதல் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. இதில் நாகர்கோவில் குளத்து பஸ் ஸடான்ட்டில் மிக குறைவான பயணிகளே பஸ்களுக்காக காத்திருந்ததையும் காணமுடிந்தது.

பயணிகள் அமர்வதற்கு பயன்படுத்தும் நாற்காலிகள் எல்லாமே துறுபிடித்தும் உடைந்தும் மிக மோசமான நிலையில் இத்துப்போய் கிடக்கிறது. சில பேருந்துகளில் பாதுகாப்புக்காக வேப்பிலை கட்டி வைத்திருந்ததை காண முடிந்தது. மொத்தத்தில் கரோனா வைரஸ் காரணமாக குறைவான பயணிகளே பேருந்தில் பயணித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory