» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நர்சை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நபர் கைது

செவ்வாய் 2, ஜூன் 2020 5:45:52 PM (IST)

அஞ்சுகிராமம் அருகே நர்சை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வாலிபர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் அருகே உள்ள காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் மர்பின் தனேஷ் ( 26). சி.டி. கடையில் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பகுதியைச் சேர்ந்த நர்சுக்கும் (26) பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நர்சை திருமணம் செய்து கொள்வதாக மர்பின் தனேஷ் ஆசைவார்த்தை கூறினார். இதனை உண்மை என நம்பிய நர்சு, அந்த வாலிபருடன் நெருங்கி பழகினார். அப்போது 2 பேரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச படங்களை மர்பின் தனேஷ் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தாராம்.

பின்னர் நர்சுடன் நெருக்கமாக இருந்த ஆபாச படங்களை அவரிடம் காட்டி பணம் கேட்டு மிரட்ட தொடங்கினார். பணம் தராவிட்டால் இந்த ஆபாச படங்களை இன்டர்நெட்டில் பரப்பி விடுவேன் என்று மிரட்டினாராம். இதுதொடர்பாக நர்சின் தாயார் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். போலீசார் மர்பின் தனேசை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory