» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கம்

செவ்வாய் 2, ஜூன் 2020 10:22:39 AM (IST)

மண்டலங்களுக்குள் அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல்பேருந்துகள் இயக்கப்பட்டது.

மண்டலங்களுக்குள் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழகஅரசு அறிவித்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி பேருந்துகள் இயக்கப்படவில்லை.  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க வேண்டிய நிலையில், அந்த மாவட்டங்களிலும் கொரோனா  பாதிப்பு அதிகமாக உள்ளதால் பேருந்துகளை இயக்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்று காலை முதல் மண்டலங்களுக்கும், மாவட்டத்திற்குள்ளேயும் குமரி மாவட்டத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டது.சமூக இடைவெளியை பின்பற்றவும், மாஸ்க் அணியவும் வலியுறுத்தப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory