» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுப்பு: காங்கிரஸ் கட்சி போராட்டம்

செவ்வாய் 2, ஜூன் 2020 10:14:15 AM (IST)

நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து நாகர்கோவிலில் மணிமண்டபம் முன்பு  ஹெச். வசந்தகுமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய போராடியவர்களில் முக்கியமானவர் மார்ஷல் நேசமணி.   இவரது 52-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து மணிமண்டபம் பூட்டப்பட்டது.
 
இந்நிலையில், வசந்தகுமார் எம்.பி. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேசமணி சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக மணிமண்டபத்துக்கு வந்தனர். மணிமண்டபம் பூட்டியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து வசந்தகுமார், ஜே.ஜி. பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள்  மணி மண்டபத்தின் வாசலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்துக்கு பின்னர், காங்கிரஸ் கட்சியினர் அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory