» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்து சேவை : விதிகளை பின்பற்ற வலியுறுத்தல்

திங்கள் 1, ஜூன் 2020 7:50:18 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு நடைமுறையில் சில தளர்வுகள் நடைமுறைபடுத்தும் பொருட்டு மாவட்டத்தில் பேருந்துகள் நாளை (02.06.2020) காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நிபந்தனைகளுடன் இயக்கப்பட உள்ளது.

இதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து உள்ளுர் மற்றும் வெளி மாவட்டம் (திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மண்டலத்திற்கு) செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.    வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட்டு வருவதால் பேருந்துகள் வெளிபுறம் நின்று செல்லும்.பேருந்தில் பயணம் செய்ய 25  பயணிகள்; மட்டுமே அனுமதிக்கப்படுவர்.   

பேருந்து ஓட்டுநர், நடத்துனர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும்.முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்தில் அனுமதிக்கப்படுவர்.காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி உள்ள பயணிகள் எவரையும் பேருந்தில் பயணிக்க அனுமதிக்க கூடாது. ஒவ்வொரு பேருந்து வழித்தடத்திற்கும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பயணிகள் பரிசோதனை செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory