» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

செவ்வாய் 26, மே 2020 1:06:44 PM (IST)மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் எதிரே விஜயதாரணி எம்எல்ஏ., தலைமையில் காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அடியோடு ஒழிப்பதற்கு ஆவண செய்யும் மத்திய,மாநில அரசுகளை வண்மையாக கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர்கே.எஸ். அழகிரி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக மாவட்ட தலைமைக்கு அறிவுறுத்தியதின் பேரில் இன்று மத்தியஅரசை கண்டித்து நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ., விஜயதாரணி தலைமை தாங்கினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory