» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காசி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் : நாகர்கோவிலில் சிபிஎம் கட்சியினர் கைது

செவ்வாய் 26, மே 2020 12:48:17 PM (IST)காசி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சிபிஎம் கட்சி சார்பில் நாகர்கோவிலிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வழியாக பல இளம்பெண்களிடம் பழகி, வீடியோ எடுத்ததுடன், அதை காட்டி மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வழக்கில் நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டம் அவர் மீது பாய்ந்தது.பெண்களை ஏமாற்றி பாலியல் மோசடி செய்ததாக 4 வழக்குகள், போஸ்கோ வழக்கு, கந்துவட்டி வழக்கு என 6 வழக்குகள் காசி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளன.

காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி கன்னியாகுமரி மாவட்ட சிபிஎம் கட்சி சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடைபெற்றது. ஊரடங்கு தடையை மீறி இந்த போராட்டம் நடைபெற்றதால் அங்கு வந்த போலீசார் ,போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory