» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உடற்பயிற்சி கூடங்களை உடனே திறக்க வேண்டும் : கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு

செவ்வாய் 26, மே 2020 11:51:45 AM (IST)

ஊரடங்கு காரணமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் மூடப்பட்ட உடற்பயிற்சி நிலையங்களை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட உடற்பயிற்சி சங்க நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட உடற்பயிற்சி சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனா தடை உத்தரவு காரணமாக ஜிம், உடற்பயிற்சி மையங்கள் பூட்டப்பட்டு இரண்டு மாதமாகிவிட்டது.இதனால் உடற்பயிற்சி செய்யும் கருவிகள் துருப்பிடித்துச் சேதமடைந்து வருவதோடு, வருமானமின்றி உடற்பயிற்சி நிலையங்களின் உரிமையாளர்கள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பெரும்பாலான உடற்பயிற்சி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் அவற்றுக்குரிய வாடகை, மின்கட்டணம் உள்பட இதர செலவுகளை ஈடு செய்ய முடியாத அளவிற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.எனவே அவற்றை உடனடியாக திறக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory