» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சென்னையிலிருந்து குமரி வந்த தந்தை, மகள் உள்ளிட்ட3 பேருக்கு கரோனா உறுதி

செவ்வாய் 26, மே 2020 10:37:02 AM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் தந்தை, மகள் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54 ஆக உயா்ந்துள்ளது.

சென்னையில் இருந்து காா் மூலம் குமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை வந்த கொட்டாரம் அச்சங்குளத்தைச் சோ்ந்த 42 வயது ஆண் 12 வயதுடைய அவரது மகள் ஆகியோருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.பின்னா் 2 பேரும் கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனா்.இந்நிலையில் அவா்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் திங்கள்கிழமை தந்தை, மகள் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதே போல் மும்பையில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த விளவங்கோட்டைச் சோ்ந்த இளைஞருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் தற்போது 26 போ் சிகிச்சையில் உள்ளனா். ஏற்கெனவே 27 போ் கரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory