» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் : மாவட்ட ஆட்சியரிடம் மோகன் சி.லாசரஸ் வழங்கல்

புதன் 1, ஏப்ரல் 2020 5:40:35 PM (IST)


தூத்துக்குடி மாவட்டம்,  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய  அறக்கட்டளை சார்பில் மோகன் சி.லாசரஸ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூாியிடம் கொரானா நோய் தடுப்பதற்கான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கான நிதி ரூபாய் பத்து லட்சத்திற்கான காசோலையை  வழங்கினார்.

குரும்பூர் அருகே நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் ஊழியம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் மோகன்.சி.லாசரஸ் மத போதனைகளை மேற் கொண்டு வருவதுடன் பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை  சார்பாக கொரோனா  நோய்த் தடுப்பு பணிகளுக்காக தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சத்தை  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம்  வழங்கினார்.

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் இதுபோல கஜா புயல் பாதித்தவர்களுக்கு உதவி, சுனாமியில் பாதித்தவர்களுக்கு உதவி என பல்வேறு உதவிகள் செய்துள்ள நிலையில் தற்போது இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.நிதி வழங்கியபோது ஆட்சியருடன்  ஊழிய அறங்காவலர் டாக்டர் அன்புராஜன் உடன்  இருந்தார்.


மக்கள் கருத்து

குமார்Apr 1, 2020 - 07:05:19 PM | Posted IP 162.1*****

நிதி அளித்ததற்கு நன்றி திரு லாசரஸ் அவர்களே ....நீங்கள் மனது வைத்தால் இன்னும் அதிகமாகவே நிதி வழங்கலாம்....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory