» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரியில் ஐந்து பேருக்கு கொரானா உறுதி எதிராெலி : சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவு

புதன் 1, ஏப்ரல் 2020 1:07:12 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐந்து பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தது.

கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்திய நிலையில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்நோய்க்கு தினமும் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள் லாக்டவுன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தனித்திரு விழித்திரு என்று விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் போலீசார் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். 

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று திரும்பிய நான்கு பேர் உட்பட கன்னியாகுமரியில் ஐந்து பேருக்கு கொரானா உறுதி செய்யபட்டதை தொடர்ந்து மார்த்தாண்டம் சாலைகள் மற்றும் காய்கறி மக்கள் கூட்டம் குறைந்த அளவில் காணப்பட்டது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory