» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தளிர் அறக்கட்டளை, அற்புதம் மருத்துவமனை சார்பில் 1000 பேருக்கு சானிட்டைசர் வழங்கல்

புதன் 1, ஏப்ரல் 2020 10:16:47 AM (IST)தூத்துக்குடி தளிர் அறக்கட்டளை, மற்றும் அற்புதம் மருத்துவமனை சார்பில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பணியாற்றும் அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு சானிட்டைசர் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது. 

கரோனா வைரஸ் வேகமாக பரவி நிலையில், தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தரும் வகையில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் அரசுக்கு உதவி வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி தளிர் அறக்கட்டளையும், தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனை ஆகியவை இணைந்து கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், பணியாற்றும் அரசு மற்றும் தனியார் பணியாளர்களுக்கு முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு சானிட்டைசர் மற்றும் முக கவசங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளது.

இவைகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் தளிர் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ஆ.தனபால், தலைமை அதிகாரி ஜெயப்பிரகாஷ், அற்புதம் மருத்துவமனை நிறுவனர் டாக்டர். ஜேம்ஸ், தளிர் தாயாரிப்புகளின் தலைவர் த.கஸ்தூரி ஆகியோர் வழங்கினர். தளிர் அறக்கட்டளையின் மக்கள் சேவைப்பணி  மென்மேலும் சிறக்க பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து, தளிர் அறக்கட்டளை தலைவர் ஆ.தனபால் கூறுகையில், எங்கள் அறக்கட்டளை ஊரக கல்வி மேம்பாட்டு பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இண்டர் நேஷன‌ல் பயிற்சியை இலவசமாக வழங்கி வருகிறோம். தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறோம் என்றார்.


மக்கள் கருத்து

ராஜாApr 1, 2020 - 03:45:43 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கட்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory