» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி

செவ்வாய் 31, மார்ச் 2020 12:10:01 PM (IST)

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகர்கோவிலில் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டும் வாங்கி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இதனிடையே நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் துப்புரவு பணியாளர்கள் மருந்து தெளித்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory