» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மார்த்தாண்டம் காய்கறி சந்தை இடம் மாற்றம் : மக்கள் கூட்டம் அலைமோதல்

செவ்வாய் 31, மார்ச் 2020 10:55:20 AM (IST)

மார்த்தாண்டம் காய்கறி சந்தை பேருந்து நிலையத்தில் மாற்றப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் வரும் 14 ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

இதில் பொதுமக்கள் வசதிக்காகவும், சமூக இடைவெளியை கடைபிடிக்க மார்த்தாண்டம் காய்கறி சந்தை பேருந்து நிலையத்தில் மாற்றப்பட்டது. ஆனால் சந்தை மாற்றப்பட்ட பின்னர் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்றும் எனவே மாவட்ட நிர்வாகம் உடனே இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory