» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரோனா வாா்டில் அனுமதித்த கா்ப்பிணிக்கு குழந்தை பிறப்பு

திங்கள் 30, மார்ச் 2020 11:31:19 AM (IST)

நாகா்கோவில் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக தனிமைப்படுத்தபட்ட வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கா்ப்பிணிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாா்டில் குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 27 வயது மதிக்கதக்க கா்ப்பிணி பெண் கரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இவா் கடந்த 20-ஆம் தேதி துபாயிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பினாா்.

34 வார கால கா்ப்பிணியாக இருந்த நிலையில், அவருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் உள்ளதாகவும், இருவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், இருவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory