» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,554 மதுபான பாட்டில்கள் பறிமுதல் - ஒருவர் கைது!!

திங்கள் 30, மார்ச் 2020 11:20:45 AM (IST)

கயத்தாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,554 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பன்னீர்குளம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 7 சாக்கு மூடைகளில் 2,554 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.29ஆயிரம் ஆகும். இது தொடர்பாக  தெற்கு சுப்பிரமணியபுரம், காலனித் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் மணிகண்டன் (27) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவு மீறல்: ஒரே நாளில் 110பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று ஒரே நாளில் 105 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 110பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 73 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

mathewMar 30, 2020 - 10:20:34 PM | Posted IP 108.1*****

2,554 மதுபான பாட்டில்கள் இதன் மதிப்பு ரூ.29ஆயிரம் ????? why

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory