» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவா் அனுமதி

திங்கள் 30, மார்ச் 2020 10:37:22 AM (IST)

நாகா்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தைச் சோ்ந்த 57 வயது நபா், கடந்த 27-ஆம் தேதி காய்ச்சல் அறிகுறியுடன் நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை மருத்துவா்கள் தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதித்தனா். மேலும், அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. 

மருத்துவா்கள் அவருக்கு தொடா்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா். ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவா் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory