» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொரோனா தொற்று கண்டறிய லேப் வசதி தேவை : முன்னாள் அமைச்சர் பொன்னார் கருத்து

சனி 28, மார்ச் 2020 5:26:16 PM (IST)

ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரியில் கொரோனா தொற்று கண்டறிய லேப் வசதி தேவை என முன்னாள் அமைச்சர் .பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது,நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்ட மூன்று பேர்  மரணம் அடைந்த செய்தி அறிந்து  மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ கல்லூரி முதல்வருடனும் பேசிய போது, மரணமடைந்த மூவரும் வேறு நோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக உடல் நலக்குறைவுடன் இருந்ததாகவும், அதனால் இம்மரணம் நிகழ்ந்ததாகவும் என்னிடம் தெரிவித்தனர். அவர்கள் கூறிய மருத்துவக் காரணங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்றாலும், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று கண்டறிவதற்கான லேப் வசதி இல்லை.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பியூலா ராஜேஷ் , தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜய பாஸ்கர் ஆகியோரை தொடர்பு கொண்டு, நாகர்கோவில் மருத்துவக் கல்லூரி வசதிகள் குறித்தும் , கொரோனா தொற்று கண்டறியும் லேப் வசதியை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தேன். அதற்கான வசதிகளை உடனடியாக ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார். அவருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தற்போது சில கட்சிகள் தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் வீண் விவாதங்கள் மட்டுமே நடக்கும், மாறாக அரசியல்கட்சிகளுக்கு  குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தொலைபேசி மூலமோ வீடியோ கான்ப்ரன்ஸ் மூலமோ கருத்துக்களை கூறும் வகையில் அமைத்தால் அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய முடியும் என்பது எனது கருத்து என தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory