» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரியில் கரோனா சிறப்பு வார்டில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

சனி 28, மார்ச் 2020 12:02:09 PM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில், மேலும் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்த முதியவர், காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் மேலும் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில், மேலும் 2 பேர் உயிரிழந்தனர். 

இதனால்  2 வயது குழந்தை உட்பட மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இறந்த 3 பேருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை வந்த பிறகே முழு விபரம் தெரிய வரும் என கூறப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory