» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கரோனா வார்டில் மேலும் ஒருவர் உயிரிழப்பு : கன்னியாகுமரியில் பரபரப்பு

சனி 28, மார்ச் 2020 10:20:55 AM (IST)

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. கரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவது உயிரிழப்பு இன்று ஏற்பட்டுள்ளது. 66 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்த அந்த முதியவர், கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளார். அங்கிருந்து வந்தபின்னர் காய்ச்சல், இருமல் ஏற்பட்டதால் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே, அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory