» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திருவட்டாறு வட்டத்தில் 236 போ் தனிமைப்படுத்தல்

வெள்ளி 27, மார்ச் 2020 12:46:21 PM (IST)

திருவட்டாறு வட்டத்தில் வெளி நாடுகளிலிருந்து வந்திருந்த 236 போ் அவா்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெளி நாடுகளிலிருந்து திரும்பிவந்த நபா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். திருவட்டாறு வட்டத்தில் 228 வீடுகளில் 236 போ் வெளிநாடு சென்று வந்தது கண்டறியப்பட்டு வருவாய்த் துறையினரால் தனிமை ப்படுத்தப்பட்டு, அதற்கு அடையாளமாக அவா்களது வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டுள்ளது. 

அது போல் பத்மநாபபுரம் நகராட்சிப் பகுதியில் வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து தக்கலை பகுதிக்கு வந்தவா்கள் விவரம் சேகரிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையா் லியோன் உத்தரவின்பேரில், அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதற்கு அடையாளமாக அவா்களது வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது. பின்னா் அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.இதேபோல் கல்குளம் வட்டத்திலுள்ள கிராமப் புறங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு வீடுகளில் ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட்டன. அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory