» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தடையை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த வாலிபர்கள் : போலீசார் நூதன தண்டணை

வெள்ளி 27, மார்ச் 2020 11:19:55 AM (IST)

குமரி மாவட்டத்தில் தடையை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்த வாலிபர்களுக்கு போலீசார் நூதன தண்டணை வழங்கப்பட்டது.

கொரொனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் கடுமையாகி ஏராளமான உயிர்களை பலிவாங்கி வருகிறது. இந்தியாவில் கொரோனா தோற்று  ஏற்பட்டதை அடுத்து மத்திய மாநில அரசுகள் விழிப்புணர்வு மற்றும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதித்து உள்ளது. 

இந்நிலையில் அதையும் மீறி வெளியே வருவோர்களுக்கு காவல்துறை சார்பில் நூதன தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கல்லுாரி அருகே 144 தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்த வாலிபர்களுக்கு கண்ட போலீசார் அவர்களை தோப்புக்கரணம் போட வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory