» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காதல் தகராறில் வாலிபர் மீது தாக்குதல் :தொழிலாளி கைது

வியாழன் 27, பிப்ரவரி 2020 12:29:12 PM (IST)

அகஸ்தீஸ்வரம் அருகே காதல் தகராறில் வாலிபரை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

அகஸ்தீஸ்வரம் அருகே பூஜபுரவிளையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் பாலா ( 24). இவர் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதல் விவகாரம் பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதை அவர்கள் கண்டித்தனர்.இந்த நிலையில் பாலா அஜீத் சம்பவத்தன்று பூஜபுரவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அந்த பெண்ணின் உறவினர் ஸ்ரீகண்டன் (27) என்பவர் பாலாவை தடுத்து நிறுத்தி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
 
இதில் படுகாயம் அடைந்த அவர் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பாலா  தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ஸ்ரீ கண்டனை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory