» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சொகுசு கார் - பைக் மோதல் 2 பேர் படுகாயம்

புதன் 26, பிப்ரவரி 2020 8:31:46 PM (IST)

இரணியல் அருகே சொகுசு கார் பைக் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியினை சேர்ந்தவர் சாம்ராஜ் (53) இவரது நண்பர் அனிஷ் (35).இவர்கள் 2 பேரும் ஒரு பைக்கில் திங்கள்சந்தை பகுதிக்கு வந்துள்ளனர். செட்டியார்மடம் பகுதியில் வரும் போது அவ்வழியே வந்த சொகுசு கார் ஒன்று இவர்களது பைக் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory