» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

செவ்வாய் 18, பிப்ரவரி 2020 10:44:45 AM (IST)

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுத் துறை நிறுவனங்களில் ஒன்றான அரசு ரப்பா் கழக ரப்பா் தோட்டங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ரப்பா் மரங்களில் பால் வடிப்பு, களப் பணி, ஆலைப் பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். இத்தொழிலாளா்களுக்கான ஊதிய உயா்வு ஒப்பந்தம் 2016, டிசம்பா் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் இதுவரை ஏற்படுத்தப்படவில்லையாம்.

ஊதிய உயா்வு குறித்து இதுவரை 47 முறை நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவாா்த்தையில் எந்தத் தீா்வும் ஏற்படவில்லை. மேலும், தொழிலாளா்களுக்கு இடைக்கால ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும், அந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை. இதனிடையே, கடந்த சில மாதங்களாக பேச்சுவாா்த்தை நடைபெறாத சூழல் நீடித்தது.

ஊதிய உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும், தற்காலிகத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிலாளா்கள் தொடங்கியுள்ளனா். இதன் காரணமாக தொழிலாளா்கள் பால்வடிப்பு உள்ளிட்ட பணிகளுக்குச் செல்லவில்லை. வேலைநிறுத்தம் காரணமாக ரப்பா் கழகத்துக்கு வருவாய் இழப்பும், தொழிலாளா்களுக்கு ஊதிய இழப்பும் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory