» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு

திங்கள் 17, பிப்ரவரி 2020 6:41:26 PM (IST)

மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் மஹாசிவராத்திரி சிவாலய ஓட்டம் 21.02.2020 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால் 21.02.2020 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறை வழங்கி உத்தர விடப்பட்டுள்ளது. 

மேலும் 21 ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறைக்கு ஈடாக 2020 மார்ச் திங்கள் நான்காவது சனிக்கிழமை (28.03.2019) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.பிப் 21 ம் தேதி ன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory