» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

முதியவரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

திங்கள் 17, பிப்ரவரி 2020 6:10:57 PM (IST)

குலசேகரத்தில் முதியவரிடம் சில்லரை கேட்பதுபோல் பணம் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் குலசேகரம் ஈஞ்சவிளை பகுதியை சேர்ந்தவர் மணி ( 72). இவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.முதியவர் மணி தனக்கு வந்த முதியவர் உதவித் தொகையை பெறுவதற்காக செருப்பாலூர் பகுதியில் உள்ள ஒரு பாங்கிற்கு சென்றார். அங்கு அவர் முதியவர் உதவித் தொகையை வாங்கிக் கொண்டு வீடு திரும்புவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் முன்பு நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் பைக்கில் வாலிபர் ஒருவர் வந்தார். அவர் முதியவர் மணியிடம் ஆயிரம் ரூபாய்க்கு சில்லரை இருக்கிறதா? என கேட்டாராம். உடனே முதியவர் தான் வைத்திருத்திருந்த முதியவர் உதவித் தொகை பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த முதியவரிடம் இருந்து பணத்தை பறித்தார். இதில் ரூ.800 கொள்ளையன் கையில் சிக்கியது. மின்னல் வேகத்தில் கையில் கிடைத்த பணத்துடன் பைக்கில் தப்பி சென்றான்.

பணத்தை பறிகொடுத்த முதியவர் கூச்சலிட்டு அலறினார். அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். மேலும் சம்பவம் குறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர்.முதியவர் மணி கூறிய அடையாளங்களை கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory