» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

சாலையில் கிடந்த பையை போலீசில் ஒப்படைத்த நபர் : உரியவரிடம் பணம் அளிக்கப்பட்டது.

திங்கள் 17, பிப்ரவரி 2020 1:55:06 PM (IST)வடிவீஸ்வரம் பகுதியில் சாலையில் பணத்துடன் கிடந்த பையை ஒப்படைத்த நபரை காவல்துறையினர் பாராட்டினார்கள். 

கன்னியாகுமரி மாவட்டம் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சங்கரநாராயணன் .இவர் மின்வாரிய பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர் நீதிமன்ற சாலை வழியாக சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு பைக்கிலிருந்து பை ஒன்று கீழே விழுந்துள்ளது. இதனை கண்ட அவர் சத்தம்போட்டும் பைக் நிற்காமல் சென்று விட்டது.இதனை தொடர்ந்து பையை திறந்து பார்த்தபோது பையில் ரூ. 12000இருந்துள்ளது.

பின்னர் அவர் அந்த பையை மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கரிடம் ஒப்படைத்தார். அதன்பின் விசாரணையில் பையை தொலைத்தவர் மயிலாடியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் தாணுமூர்த்தி என்பது தெரியவந்தது. பின்பு பை போலீசார் முன்னிலையில் அவரிடம் வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory