» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

நாகர்கோவிலில் பள்ளி மாணவர் கழுத்தில் சேலை இறுக்கி பலி

திங்கள் 17, பிப்ரவரி 2020 1:37:14 PM (IST)

நாகர்கோவிலில் தாயாரின் சேலையை மின் விசிறியில் போட்டு விளையாடி கொண்டிருந்த போது சேலை கழுத்தில் இறுக்கி 7-ம் வகுப்பு மாணவர் பலியானார்.

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயம் அருகே உள்ள முதலியார் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் சதீஷ். இவர் நாகர்கோவிலில் உள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார்.இவரது மனைவி விஜி. இவர் அரசு ஊழியராக  பணியாற்றுகிறார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.மகன் ஆண்டோசப்ரின் ( 12). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். . நேற்று விடுமுறை என்பதால் ஆண்டோசப்ரின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாராம்.

தனது தாயாரின் சேலையை வீட்டில் இருந்த மின் விசிறியில் போட்டு விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆண்டோசப்ரின் கழுத்தில் சேலை இறுக்கியது. உடனே ஆண்டோசப்ரின் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory