» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மனைவியை தீவைத்து எரித்ததாக விவசாயி கைது

திங்கள் 17, பிப்ரவரி 2020 1:23:51 PM (IST)

குமரி மாவட்டம் தோவாளையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தீவைத்து எரித்த விவசாயியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் தாஸ் (55). விவசாயி.இவரது மனைவி இரக்கம் (52). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.  கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மனைவியின் நடத்தையிலும் புஷ்பதாசுக்கு சந்தேகம் இருந்து வந்ததாம். இந்நிலையில் சம்பவத்தன்றும்அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாஸ், மனைவி இரக்கத்தை கம்பால் தாக்கினார். மேலும் வீட்டில் இருந்த மண்எண்ணையை அவரது உடலில் ஊற்றி தீ வைத்தாராம். இதையடுத்து இரக்கம் வீட்டில் இருந்து பின்வாசல் வழியாக வெளியே ஓடினார்.

அப்போது வீட்டின் பின்னால் இருந்த ஓலை குடிசை தீப்பிடித்து எரிந்தது. இரக்கத்தின் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்தனர். அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.  இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட புஷ்பதாசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory