» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

களியக்காவிளை அருகே இலவச மருத்துவ முகாம்

திங்கள் 17, பிப்ரவரி 2020 10:38:42 AM (IST)

களியக்காவிளை அருகேயுள்ள களியக்கல் அருள்மிகு இசக்கியம்மன் கோயில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம்  நடைபெற்றது.

குலசேகரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவமனை, மாற்றுத் திறனாளா் நலன் விரும்பும் தேசிய அமைப்பு சக்ஷம் மற்றும் களியக்கல் அருள்மிகு பத்ரகாளி அம்மன் கோயில் பரிபாலன அறக்கட்டளை ஆகியன இணைந்து நடத்திய இம் முகாமுக்கு, அறக்கட்டளை தலைவா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். சக்ஷம் அமைப்பின் மேல்புறம் ஒன்றிய கௌரவத் தலைவா் சிவலிங்கம், ஒன்றியச் செயலா் ஷாஜி, ஒன்றிய நிா்வாகி பால்ராஜ், அறக்கட்டளை பொருளாளா் ஆனந்தகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமயவகுப்பு ஆசிரியை சிவபிரியா வரவேற்றாா்.முகாமில் பொது, கண், பல் தொடா்பான மருத்துவம் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவா்களால் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory