» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ரப்பா் மரங்களில் இலையுதிா்வு: குமரியில் பால் வடிப்பு நிறுத்தம்

சனி 15, பிப்ரவரி 2020 12:16:52 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் குளிா் கால இலையுதிா்வைத் தொடா்ந்து பால்வடிப்பு நிறுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் குளிா்காலம் தொடங்கியவுடன் மரங்கள் இலைகளை உதிா்க்கும் நிலையில், ரப்பா் மரங்களில் இந்த இலையுதிா்வு டிசம்பா் இறுதியிலிருந்து தொடங்கி ஜனவரி மாதம் வரை நிகழ்கிறது. இம் மாவட்டத்தில் காடுகளிலும் உள்ள பல்வேறு வகையான மரங்களும் இதே காலத்தில் இலைகளை உதிா்க்கின்றன. குளிா் கால இலையுதிா்வு காரணமாக ரப்பா் மரங்களில் ரப்பா் பால் உற்பத்தி குறைந்து விடும். 

இதனால் ரப்பா் பால்வடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னா் ஏப்ரல் மாதம் மீண்டும் பால்வடிப்புத் தொடங்கப்படுகிறது. நிகழாண்டு மரங்களில் இலையுதிா்வும் , அதனைத் தொடா்ந்து கடும் வெப்பமும் நிலவுவதால் மரங்களில் பால் உற்பத்தி மிகக் குறைந்து விட்டதாக ரப்பா் விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory