» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

மக்கள் அமைதிக்காக முருகனுக்கு காவடி எடுத்த காவல்துறையினர்

வெள்ளி 13, டிசம்பர் 2019 6:20:53 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மக்கள் அமைதியாக வாழ வேண்டி காவல்துறையினர் விரதமிருந்து முருகனுக்கு காவடி ஏந்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் கன்னியாகுமரி இருந்தது முதல் குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழ காவல்துறையினரும், நீர்வளம் செழித்து விவசாயம் தழைத்தோங்க பொதுப்பணித்துறையினரும் கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்று அங்குள்ள குமாரர் கோயிலிலுள்ள முருகனுக்கு நேர்த்தி கடன் செலுத்தி வருவது நடைபெற்று வருகின்றது.

அதன்படி கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீஸாரும், அதிகாரிகளும் காவடி எடுத்து சென்றனர். தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்து பொதுப்பணி துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காவடி ஏந்தி சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory