» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உள்ளாட்சி தேர்தல் : குமரி மாவட்டஆட்சியர் ஆய்வு

வெள்ளி 13, டிசம்பர் 2019 5:38:46 PM (IST)

2019 ஊரக உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கின்ற தேர்தலையொட்டி ஊராட்சி ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல்  வாக்கு எண்ணிக்கை மையங்களை  மாவட்ட தேர்தல் அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான  பிரசாந்த் மு.வடநேரே  பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தமிழகம் முழுவதும், கிராம ஊராட்சிகளுக்கு வருகிற 27-ஆம் தேதி மற்றும் 30-ஆம் தேதிகளில்                2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, 95 ஊராட்சிகள், 984 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 11 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 111 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், இத்தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். 

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே (13.12.2019) திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியிலும், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், வாவறை புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளியிலும் மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், திருத்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும் அமைக்கப்படவுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை பார்வையிட்டு, அந்தந்த ஒன்றியங்களிலுள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன்  கலந்தாய்வு செய்தார்.

நடைபெற்ற ஆய்வில், சார் ஆட்சியர் (பத்மநாபபுரம்) ஷரண்யா அறி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பிச்சை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)சையத் சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர்ஃ தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory