» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ம்தேதி ஆர்ப்பாட்டம் : விக்கிரமராஜா பேட்டி

வெள்ளி 13, டிசம்பர் 2019 1:54:40 PM (IST)

தமிழகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து 17-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் குமரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் குலசேகரத்தில் நடை பெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-ஆன்லைன் வர்த்தகத்தால் இந்திய அளவில் ஒட்டு மொத்த வணிகமும் பாதிக்கப்பட்டு வியாபாரம் சீர்குலைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் தற்போது 37 சதவீதம் வரை சிறுவணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஆன்லைன் வர்த்தகத்தை கண்டித்து வருகிற 17-ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வெங்காயம் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி வணிகர்களும் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளோம். இது போன்று விலை உயர்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் அரசாங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.நடிகர் விஜய் சேதுபதி ஆன்லைன் வணிகத்திற்கு ஆதரவான விளம்பரத்தில் நடித்துள்ளது ஏற்புடையதல்ல. வணிகர்களின் ஆதரவின்றி எந்தத் திரைப்படமும் வெற்றி பெற முடியாது. விஜய் சேதுபதியின் சமீபத்திய திரைப்படம் தோல்வியைத் தழுவி உள்ளது. விஜய் சேதுபதி தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory