» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கணவனை கொன்று விட்டு நாடகம் : மனைவி சிக்கினார்

வெள்ளி 13, டிசம்பர் 2019 10:43:53 AM (IST)

நாகர்கோவில் அருகே கணவனை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் கரியமாணிக்கபுரத்தை சேர்ந்த ஐயப்பன். இவர் தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டியுள்ளார்.தகவலறிந்து சென்ற போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ஐயப்பனின் சடலத்தை மீட்டனர். ஆரம்பம் முதலே கிருஷ்ணவேணி மீது சந்தேகத்தில் இருந்த போலீசார், அவரிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இதே போன்று நேற்றும் ஐயப்பன் தகராறு செய்த போது, கோபம் அடைந்த கிருஷ்ணவேணி அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்துக் கொலை செய்து, பின்னர் நாடகம் ஆடியுள்ளார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory