» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வியாழன் 21, நவம்பர் 2019 8:39:34 PM (IST)நவம்பர் 2019 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கன்னியாகுமரி மாவட்டஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில்; இன்று (21.11.2019)  நடைபெற்றது. 

இதில் பொதுப்பணித்துறை மூலம் சானல்களில் தண்ணீர் வரத்து மற்றும் குளங்களை தூர் வாருதல், நீர்நிலை பராமரித்தல் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்  போன்ற கேள்விகளுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. குளங்களை பயன்படுத்தி பயிர் செய்யும் மொத்த விவசாயிகளில் 50 சதவிகிதத்திற்கு  அதிகமான விவசாயிகள்  இணைந்து தங்கள் பங்குத்தொகையாக 10 சதவிகித  தொகை செலுத்தி பொதுப்பணித்துறை குடிமராமத்து திட்டத்தில் குளங்களை தூர் வார விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறினார்.  தென்னை மரங்களில் தற்போது பரவி வரும்  தாக்கும் ரூகோஸ் வெள்ளை சுருள் ஈ தாக்குதலை தடுப்பது தொடர்பாகவும், தென்னை கேரளா வாடல் நோய் மற்றும் வேர் வாடல் நோய் கட்டுப்பாடு  தொடர்பாகவும் பதில்கள் வழங்கப்பட்டன. 

இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ்  மற்றும்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குணபாலன்,  மண்டல இணை இயக்குநர் நடராஜகுமார், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) பாலகிருஷ்ணன், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory