» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளை

வியாழன் 21, நவம்பர் 2019 6:22:41 PM (IST)

ராஜாக்கமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை,பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜாக்கமங்கலம் பிள்ளையார்விளை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 44). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பியபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ், வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு மற்றும் ரொக்கப்பணம் ரூ.5 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதுபற்றி வெங்கடேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory