» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிராமங்களில் அடிப்படை வசதிகள் : ஆட்சியர் ஆய்வு

வியாழன் 21, நவம்பர் 2019 6:05:51 PM (IST)




கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு.வடநேரே நேரில் சென்று, ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி, மோதிரமலை, கொடுத்துறைமலை, முடவன்பொத்தை,  தச்சமலை, தோட்டமலை, ஆண்டிபொத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்களின்  அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளையும்,  மைலார் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் பழங்குடியினர் பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வித்திறனை  கேட்டறிந்து, அவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில்,  மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி  மாவட்ட வன அலுவலர் ஆனந்த் , பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ஷரண்யா அறி   உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)சுலைமான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) குணபாலன், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலர் (கிராம ஊராட்சி) ஜிஜிலட், உதவி பொறியாளர் ரெஜின், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory