» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

திபெத்திய மக்களுக்கான தற்காலிக கடை ஆணை நாகர்கோவில் ஆணையர் வழங்கினார்

வியாழன் 21, நவம்பர் 2019 1:17:52 PM (IST)திபெத்திய மக்களுக்கான தற்காலிக கடை ஆணைகளை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வழங்கினார்.

ஐயப்ப பக்தர்கள் தற்போது மாலை அணிந்து விரதம் தொடங்கியுள்ளனர். கன்னியாகுமரிக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்காக சீசன் கடைகள் அங்கு அமைக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் திறந்த வெளியில் வியாபாரிகள் நேரடியாக கலந்து கொள்ளும் வண்ணம் டெண்டர் நடைபெற்றது குறிப்பிடதக்கது. கன்னியாகுமரி பேரூராட்சியில் சபரிமலை சீசன் காலத்தில் பல ஆண்டுகளாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் திபெத்திய மக்களுக்கான தற்காலிக கடை ஆணைகளை கன்னியாகுமரி ஐயப்ப சீசன் சிறப்பு அதிகாரியும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையருமான சரவணகுமார் வழங்கினார். ஆணைகளை பெற்று கொண்ட திபெத்திய மக்கள் மாநகராட்சி ஆணையருக்கு நன்றி தெரிவித்தனர்.  உடன் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன் அவர்கள், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் மன்னா ஆகியோர் இருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory