» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம்

சனி 16, நவம்பர் 2019 12:58:39 PM (IST)

நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் கிறிஸ்துநகரில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா  கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி ஆலய வளாகம் முழுவதும் நேற்று வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. முதல் நாளான நேற்று மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடைபெற்றது. இரவு 7.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு கொடியை ஏற்றிவைத்தார். தொடர்ந்து திருப்பலி நடந்தது.

கொடியேற்றத்தின்போது ஆலய பங்குபேரவை துணை தலைவர் ஜாய் சிங் மரிய ஜாண், செயலாளர் மரிய ஜாண் சேவியர், பொருளாளர் கிளாடிஸ் பியூலா, துணை செயலாளர் பேபி, பங்குத்தந்தை அருள் ஆனந்த் உள்பட பலர் உடனிருந்தனர். நிகழ்ச்சியில் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாகிகள் மற்றும் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது. 23-ந் தேதி காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருமுழுக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு சிறப்பு ஆராதனை போன்றவை நடைபெறும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Sterlite Industries (I) Ltd



Thoothukudi Business Directory