» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தொழிலதிபர் வீட்டில் 7½ பவுன் தங்க நகை திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 15, நவம்பர் 2019 1:09:53 PM (IST)

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் தொழிலதிபர் வீட்டில் 7½ பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (38), சென்னையில் தொழில் செய்து வருகிறார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே ராமகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சுசீந்திரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெளியே வீசப்பட்டு கிடந்தன. ஆனால் பீரோவில் பணம் அல்லது நகை ஏதேனும் திருட்டு போனதா? என்று போலீசாரால் உறுதிப்படுத்த முடியவில்லை. இதனையடுத்து ராமகிருஷ்ணனை போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரித்தனர்.

அப்போது பீரோவில் 7½ பவுன் நகை வைத்திருந்ததாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து நகை பீரோவில் இருக்கிறதா? என்று போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் பீரோவில் நகை இல்லை. அதை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. பீரோவில் நகைகளுடன் சேர்த்து சுமார் ஒரு கிலோ எடையில் வெள்ளி பொருட்களும் வைக்கப்பட்டு இருந்தன. எனினும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் எடுக்கவில்லை. நகைகளை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.இதே பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தற்போது தொழில் அதிபர் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து

அருண்Nov 16, 2019 - 10:18:19 AM | Posted IP 106.1*****

cctv camera vaiyungal. chennai vida rich people nagercoil la than athigam.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory