» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கடன் தொல்லையால் சுய உதவிக்குழு பெண் தற்கொலை

வியாழன் 14, நவம்பர் 2019 7:14:21 PM (IST)

நாகர்கோவிலில் கடன் தொல்லையால்  சுய உதவிக்குழு பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் ராஜ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முருகேஸ்வரி (33).இவர் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். அந்த குழுவில் இருந்து அவர் கடன் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தாராம். சுய உதவிக்குழு நிர்வாகிகளும் வாங்கிய பணத்தை திருப்பிக்கட்டும் படி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் முருகேஸ்வரி மனவேதனை அடைந்தார். நேற்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் முருகேஸ்வரியின் பிணத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory