» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பொழிக்கரை கடற்கரையில் பிணமாக கிடந்த குழந்தை

வெள்ளி 20, செப்டம்பர் 2019 12:27:21 PM (IST)

ஈத்தாமொழி அருகே பொழிக்கரை கடற்கரையில் பிறந்து 3 மாதமே ஆன குழந்தை அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. 

குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே பொழிக்கரை கடற்கரை கிராமத்தில் நேற்று காலை பிறந்து 3 மாதமே ஆன குழந்தை ஒன்று அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. இதுபற்றி ஈத்தாமொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி கீதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

கடற்கரையில் இறந்து கிடந்த குழந்தை அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் அந்த குழந்தையின் உடல் கடலில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கி இருக்கலாம் என்று தெரிகிறது. கடலில் குழந்தையை வீசி சென்றது யார்? என்ன காரணம் என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd

Anbu CommunicationsThoothukudi Business Directory