» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கருங்கல்லில் சாலைப் பணி: வாகனப் போக்குவரத்து மாற்றம்

வெள்ளி 20, செப்டம்பர் 2019 11:26:46 AM (IST)

கருங்கல் அஞ்சல் நிலையம் அருகிலிருந்து நிர்மலா மருத்துவமனை திருப்பம் வரை கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதால், மார்த்தாண்டம் செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

கருங்கல் - மார்த்தாண்டம் சாலை எட்டணி வரை சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு பழுதைடந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. அதில், வாகனங்கள் செல்ல சிரமப்பட்டன. நெடுஞ்சாலைதுறை முதல்கட்டமாக கருங்கல்  அஞ்சல் நிலையம் முதல் நிர்மலா மருத்துவமனை திருப்பம் வரை சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை புதன்கிழமை தொடங்கினர்.இதையொட்டி,  மார்த்தாண்டம் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் கருங்கல் பேருந்து நிலையத்திலிருந்து கூனாலுமூடு, பாலூர், மூசாரி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory